மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம்.    

(மத்தேயு 1:20)

இனி வருவன …

24/03/2019 ஞாயிறு தமிழ்த் திருப்பலி - 13:00
14/04/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி -
på M.M. 14:00
18/04/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M.  -  15:30
18/04/2019 புனித வியாழன் நற்கருணை ஆராதனை - 21:30
19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00
20/04/2019  பெரியோர் + இளையோர் கருத்தமர்வுகள் (10:00 + 15:00)
21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி -
16:30
22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00
28/04/2019 ஞாயிறு தமிழ்த் திருப்பலி - 13:00
31/05/2019 மறைக்கல்வி Tur til Fløye

 

நோர்வே கத்தோலிக்க திருச்சபை

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்க விசுவாசம் நோர்வே மண்ணில் நிலைகொண்டது. புனித ஊளாவ் (St Olav) என்னும் நோர்வேஜிய மன்னன் கத்தோலிக்க மறையைப் பரப்ப தம் உயிரையும் ஈந்தார். பின்பு மத்தியகாலத்தில் எழுந்த  பிரிவினைச் சபையின் நெருக்குவாரத்தினால் நோர்வே கத்தோலிக்க திருச்சபை களையிழந்தது.
இருபதாம் நூற்றாண்டின் இறுதி தாசப்தங்களிலும் தொடர்ந்த 2000ம் ஆண்டையடுத்த  காலத்திலும் நோர்வேயை நோக்கிப் புலம்பெயர்ந்த கணிசமான கத்தோலிக்கரின் வருகையைத் தொடர்ந்தும் நோர்வே கத்தோலிக்க திருச்சபை புதுவடிவம் பெறுகிறது.
நோர்வே கத்தோலிக்க திருச்சபை முறையே, ஒஸ்லோ (Oslo), ட்றொம்சோ (Tromsø), ட்றொண்ட்ஹைய்ம்(Trondheim) என மூன்று நிர்வாக மறையலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் சுமார் 150000 கத்தோலிக்கரைக் கொண்டிருக்கும் ஒஸ்லோ மறைமாவட்டம் அதி வந்தனைக்குரிய ஆயர் பேர்ண்ட் ஐட்ஸ்விக் (Bernt Eidsvi) ஆண்டகை அவர்களின் ஆயத்துவத்தில் வளர்ந்து வருகின்றது. மொத்தம் 28 பங்குப் பணித்தளங்களாகப் பிரக்கப்பட்டுள்ள ஒஸ்லோ மறைமாவட்டத்தில் ஆயரவர்களோடு இணைந்து சுமார் 70 குருக்களும், 25இற்கு மேற்பட்ட துறவற சபைகளைச் சேர்ந்த ஆண், பெண் துறவிகளும் இன்னும் நூற்றிற்கு மேற்பட்ட பொது நிலைப்பணியாளர்களும் ஆர்வமாய்ப் பணிபுரிகின்றனர்.

 

Go to top
Template by JoomlaShine