புனித மரியன்னையின் துயரங்கள்  (வியாகுல அன்னை)

எல்லாம் வல்ல இறைவா,

தம் மகனின் சிலுவை அடியில் நின்று அவருடைய பாடுகளில் பங்கேற்கும் அளவிற்கு மரியன்னைக்கு ஆற்றல் அளித்தீரே!        நாங்கள் அந்த அன்னையோடு கிறிஸ்துவின் பாடுகளில் நாளும் எங்களை இணைத்து, அதன் வழியாக உயிர்ப்பின் வாழ்வு   வாழச் செய்தருளும்.

உம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம்   திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். - ஆமென்.