உங்களுள்  எவரும்  தம்மைக்  குறித்து  மட்டுமீறி  மதிப்புக்  கொள்ளலாகாது;  அவரவருக்குக்  கடவுள்  வரையறுத்துக்  கொடுத்த  நம்பிக்கையின்  அளவுக்கேற்ப  ஒவ்வொருவரும்  தம்மை  மதித்துக்  கொள்ளட்டும்.  ஒரே  உடலில்  நமக்கு  உறுப்புகள்  பல  உள;  அந்த  உறுப்புகளெல்லாம்  ஒரே  செயலைச்  செய்வதில்லை.  அதுபோலவே,  நாம்  பலராயிருந்தாலும்  கிறிஸ்துவோடு  இணைந்திருப்பதால்  ஒரே  உடலாய்  இருக்கிறோம்;  ஒருவருக்கொருவர்  உடனுறுப்புகளாய்  இருக்கிறோம்.
உரோமையர் 12:3-5

திரு அவை  வாழ்வின்  மையமாக  இருப்பது,  இறைவேண்டலே.  இறைவேண்டலே,  நம்மை  கிறிஸ்துவோடு  இணைத்து,  நற்செய்திக்கு  சான்று  பகர்வதை  நம்மில்  தூண்டி,  உதவி  தேவைப்படுவோருக்கு  பிறரன்பு  செயல்களை  ஆற்ற  நமக்கு  ஊக்கமளிக்கிறது.  இறைவேண்டல்  வழியே,  நாம்,  உயிர்த்த  இயேசுவின்  வாழ்வை  அனுபவிக்கிறோம்.  திரு அவையின்  படிப்பினைகளிலும்,  அருளடையாளங்களிலும்,  ஒப்புரவு,  அமைதி,  நீதி  என்பவற்றை  உள்ளடக்கிய  இறையரசை  முன்னெடுத்துச்செல்லும்  நம்  முயற்சிகளிலும்  இயேசு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 -- திருத்தந்தை  பிரான்சிஸ் 

Go to top
Template by JoomlaShine